Monday, August 29, 2016

எம்.பி.யாக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் நான் சேர முடியாது என்பது சட்டம் என்று சசிகலா புஷ்பா எம்பி கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராக சசிகலா புஷ்பா எம்பி  நள்ளிரவு 12.25 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம்  மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்தார். 

அழைத்திருப்பதால் நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்து ஆஜராக குடும்பத்துடன் வந்து உள்ளேன். அதுவரை எந்த பிரச்சனையும் நீதிமன்றம் முடித்துவிட்டு செல்லும் வரை சொல்ல முடியாது. டெல்லி நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி உள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழங்குவார்கள் என நினைக்கிறேன். எம்.பி.யாக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் நான் சேர முடியாது என்பது சட்டம். கட்சியில் சேருவது பற்றி இப்போது பேச வேண்டாம். எனது நடவடிக்கைகள் போக போக பொறுந்திருந்து பாருங்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer