Wednesday, August 31, 2016

மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.  

கடகம்: காலை 11.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தி
யமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

சிம்மம்: காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள். 

கன்னி: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

துலாம்: உணர்ச்சி பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு: காலை 11.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பர். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள். 

மகரம்:  காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.   

மீனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer