Monday, May 30, 2016

நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என நம் இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொள்ளும்  நடிகைகளைப் பார்த்தால் பொதுவாக நம்முடைய மனதில் எழும் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும், 'எப்படித்தான் இவங்க மட்டும் ஸ்லிம்மா, ப்யூட்டியா இருக்காங்க..?’

‘இது ரொம்ப சிம்பிள்ங்க’ என்கிறார்,சென்னையில் பல வருடங்களாக மாடல் ஒருங்கிணைப்பாளராக இருந்துவரும் 'மேங்கோ காஸ்டிங் மாடல் ஏஜென்ஸி' யின் உரிமையாளர் பிரான்சிஸ். மாடல்கள் தங்கள் அழகைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்யும் விஷயங்கள் என்ன என்பது பற்றியும், சமுதாயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற சில டிப்ஸ்களையும் இவரிடம் பதிவு செய்ய வரும் மாடல்களுக்கு 'பர்சனாலிட்டி' வகுப்பாக எடுக்கிறார். அந்த வகுப்பில், மாடல்கள் என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக் கூடாது என்பதையும் சொல்லிக் கொடுக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ரேஷ்மி, அருந்ததி என இவர் வகுப்பில் கலந்து கொண்ட பல மாடல்கள், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ மாடல்கள் செய்யக்கூடிய பொதுவான விஷயங்களை இங்கே பகிர்கிறார்:-

1. உடற்பயிற்சி:

தங்கள் உடல் எடையை குறைக்க, இரண்டு வழியை நாடுவார்கள். 1. நடன வகுப்பு, 2. உடற்பயிற்சிக் கூடம். அதே சமயம் இருக்கும் எடையை அப்படியே தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள யோகா வகுப்பை தான் 'டிக்' செய்வார்கள்.

2. உணவு:

காலையில் ஒரு ஆப்பிள், ஆயில் இல்லாத ஆம்லெட் ஒன்று. மதியம்: லிமிட்டெட் மீல்ஸ். மாலை: ஃப்ரூட் ஜூஸ். இரவு உணவாக இரண்டு சப்பாத்தி, ஆயில் இல்லாத ஆம்லெட் ஒன்று. காபி, டீ-க்கு மாடல்கள் எப்போதும் சொல்வது 'நோ' தான்.

3. டிரிங்க்ஸ்:

வெளி விசேஷங்களுக்கு சென்றால் தாராளமாக ஆயில் அதிகம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்.. உதாரணமாக பிரியாணி போன்ற உணவுகள். அதே போல, 'சோஷியல் ஃபங்க்‌ஷனில் ஒயின் மட்டுமே அருந்துவார்கள். ரெட் அல்லது ஒய்ட் ஒயின். மற்ற பானங்களை பெரும்பாலும் அருந்தமாட்டார்கள்.

4. முகத்திற்கு:

99% மாடல்கள் முகம் கழுவுவதற்கு சுத்திகரிப்பட்ட பாட்டில் தண்ணீரைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால, ஸ்கின் எப்போதும் போலவே ஷைனிங்காக இருக்கும்.

5. சோப்பு:

எவ்வளவு பெரிய மாடல்களாக இருந்தாலும், அவர்கள் பயன்படுத்தும் சோப்பு பெரும்பாலும் கொலஸ்ட்ரால் அதிகமாக சேர்க்கப்பட்ட வெண்மை நிற சோப்பைதான் பயன்படுத்துவார்கள். இதற்குப் பின் ஒரு காரணம் இருக்கிறது. இயற்கையாகவே, நம் சருமத்தை பாதுகாக்க 'கொலஜன் 'எனும் கெமிக்கல் நம்முடைய உடலில் சுரக்கும். இந்த கெமிக்கல் நம் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகளிடமிருந்து  பாதுகாக்கும். மற்ற சோப்பு வகைகளைவிட இது போன்ற வெண்மை நிற சோப்பில் கொழுப்பின் சதவீதம் அதிகமாக இருப்பதால் 'கொலஜனுக்கு' எந்த பாதிப்பையும் தருவதில்லை. மேலும், இதற்கு சருமத்தின் ஈரப்பத்ததை தக்கவைத்துக் கொள்ளும் தன்மையும் உண்டு. முகத்தில் கரும்புள்ளிகள், பிம்பிள்ஸ் போன்றவை ஏற்படாமலும் தடுக்கிறது.

6. மேக்கப்:

75% க்கும் மேற்பட்ட மாடல்கள், மேக்கப் புராடக்டைப் பொருத்தவரை அனைவருமே 'மேக்' புராடக்ட் மேக்கப் பொருட்களைத்தான் பயன்படுத்துவார்கள்.

7. தலை

குளிக்க, சிகைக்காயைத் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் சிகைக்காய் மட்டுமே குளித்து முடித்த பின்பு, முடியில் விரல்களால் கோதினால் சிக்கல் இல்லாமல் முடி பிரியும். முடியின் வேர்கால்களில் காற்றுப் படும் அளவிற்கு காற்றோட்டப் பகுதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் சிகைக்காய் பெரும் பங்கு வகிக்கிறது.

8. எண்ணெய் குளியல்;

எல்லா மாடல்களும் வாரத்துக்கு ஒரு முறை கட்டாயமாக தவறாமல் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பார்கள். இதன் முதல் வாரம் முழுக்க உடல் குளிர்ச்சியாக இருக்கும். எண்ணெயைப் பொருத்தவரை சுத்தமான தேங்காய் எண்ணெயைத்தான் பெரும்பாலான மாடல்கள் பயன்படுத்துகிறார்கள்.

9. பார்லர்;

பெரும்பாலும் கர்லிங், ஸ்டிரெய்டனிங், ஹேர் ரிமூவிங் (வாக்ஸிங்), ஐப்ரோ இவற்றிற்கு மட்டுமே மாடல்கள் பார்லருக்கு செல்வார்கள்

என்ன சார்..  பத்து பாய்ன்ட்ஸ்ன்னு ஒன்பதுதான் சொல்லிருக்கீங்க என்று கேட்டோம்..

’புற அழகுக்காக இப்படி என்னதான் பண்ணினாலும் மனசுல தைரியமும், தெளிவும், நல்லெண்ணமுமா இருக்கறவங்க  ரொம்ப அழகாவேதான் தெரிவாங்க!” என்றார்.

ஓ! இதையெல்லாம் ஃபாலோ பண்றதாலதான் இவங்க தொடர்ந்து வெற்றிப்படிக்கட்டுல ஏறிகிட்டே இருக்காங்க போலயே!

0 comments :

Post a Comment

 
Toggle Footer