Sunday, May 29, 2016

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக் கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள்.

ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற் றவர் களுக்காக  சில பொறுப் பு களை ஏற்பீர்கள். வீடு,வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலை ச்சல், டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும்.  விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தே கப்படுவதை முதலில் நிறுத் துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து  கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம்.  வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

சிம்மம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.  விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர் வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில்  இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அமோகமான நாள்.

துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத்  தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
விருச்சிகம்

விருச்சிகம்: பிரியமானவர்க ளின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாயா ருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.  அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு: தன்னிச்சையாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன் பிறந் தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு  கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.
மகரம்

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கேட்ட  இடத்தில் உதவிகள் கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சிபடி  செயல்படும் நாள். 

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும்.  முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer