Saturday, May 28, 2016

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள்.  உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மிதுனம்: மதியம் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.  

கடகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். தாயாரின் உடல் நலம் சீராகும். திடீர் பயணங்கள் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.  

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுக
மாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தைரியம் கூடும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்: மதியம் 1.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள். 

கும்பம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். மதியம் 1.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer