Monday, May 30, 2016

நடிகை பிரியாமணி தனியார் நிறுவன அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை 4 வருடங்களாக காதலித்து வருகிறார்.  இவர்கள் பெங்களுரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நடிகை பிரியாமணிக்கும், முஸ்தபா ராஜுக்கும்  இடையே நட்பு மலர்ந்துள்ளது. அதுவே காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் இரு வீட்டார் சம்மத்துடன்  கடந்த வெள்ளிக்கிழமை அன்று இருவருக்கும் பெங்களூரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த ஆண்டு  இறுதியில் இவர்களது திருமணம் நடைபெறும். இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரியாமணி கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer