Sunday, May 29, 2016

ஈழத் தமிழர்களின் நலன் காக்க தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சரை வசதியான ஒரு தினத்தில் சந்திப்பதாகவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா ஜெயராம் ஆறாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டமைக்க வாழ்த்துத் தெரிவித்து கடிதமொன்றை எழுதியிருந்தார்.

குறித்த கடிதத்துக்கு பதிலளித்து கடிதமொன்றை எழுதியுள்ள தமிழக முதல்வர் அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைத் தமிழர் நலன் காக்க அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுத்துள்ளேன். அதுபோலவே, எதிர்காலத்திலும் இந்திய அரசின் மூலம் நடவடிக்கைகளை எடுப்பேன். அத்தோடு, இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer