Saturday, May 28, 2016

கடந்த இரு வாரங்களுக்குள் தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடு என்று உயர்ந்து உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை கட்டுக்குள் இருந்தது. கிலோ 15 ரூபாய்க்கு மிகாமலும் இருந்தது.இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்குள் கிடுகிடுவென்று உயர்ந்து தற்போது கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்படும், ஈரோட்டில் ஆயிரம் ஏக்கர் பர்டப்பளவில் தக்காளி பயிரிடப்படும். பிறகு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் இருப்புக்கு ஏற்ப தக்காளி விளைவிக்கப்படும். ஆனால், இந்த வருடம் தக்காளி பயிர் அதிக வெயில் காரணமாக ஆரம்ப நிலையிலேயே கருகியதாகவும்,இதனால் விளைச்சல் மிகவும் கம்மியாகி உள்ளது என்றும் தெரிய வருகிறது.

ஒரே ஆறுதலாக ஆந்திராவிலிருந்து தக்காளி வரத்து சிரான அளவில் இருப்பதால், தக்காளி கிலோ விலை 70 ரூபாய் என்கிற ரீதியில் இருக்கிறது என்றும், ஆந்திராவிலிருந்து தக்காளி வராமல் இருந்தால் கிலோ 100 ரூபாய் விற்கப்படும் என்று சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டு உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer