Saturday, May 28, 2016

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல்,  அஜித் - விஜய் என தொடர்ந்து வரும் ரசிகர்கள் மோதல் தனுஷ் - சிம்பு ரசிகர்கள் வரை தொடர்கிறது. திரைப்படங்களில் ஒருவருக்கொருவர் எதிரியாக நினைத்து வசனம் பேசிக்கொண்டாலும் நிஜ வாழ்வில் இருவரும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

பல பிரச்சனைகளையும் தாண்டி வெளிவந்திருக்கிறது சிம்பு - நயந்தாரா நடித்த “இது நம்ம ஆளு”. இப்படம் வெற்றியடைய சிம்புவுக்கு தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து சொல்லிவருகிறார்கள். இதைப் பாராட்டும் விதமாக தன் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி டுவீட் செய்துள்ளார் தனுஷ்.

அதில் “என் ரசிகர்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன். இது தொடர வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer