Friday, May 27, 2016

காலியிலுள்ள பூசா சிறைச்சாலையில் திடீர் தேடுதல் வேட்டை ஒன்று நேற்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் ஏதேனும் சட்டவிரோத பொருட்கள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்கிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு குறித்து விசாரணை செய்யும் நோக்கில் அண்மைய நாட்களில் இவ்வாறான தேடுதல் வேட்டைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஓர் கட்டமாகவே பூசா சிறைச்சாலையிலும் தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் மோப்ப நாய்கள் இந்த தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பூசா சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி சீ.லியனகேவின் வழிகாட்டல்களுக்கு அமைய சிறைச்சாலையின் பிரதம உத்தியோகத்தர் எம்.ரீ.ஆர்.ஜயரட்னவின் கண்காணிப்பில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இந்த தேடுதல் வேட்டையில் மீட்கப்பட்ட பொருட்கள் பற்றிய விரபங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பத குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer