Friday, May 27, 2016

சமையல் கலை என்பது சிலருக்கு கைவந்த கலை, பலருக்கு கைதேராத கலை.

நல்ல ருசியுடன் உணவுகளை சமைத்து, அதனை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறும் போதும், அதனை ருசித்துவிட்டு வாயாற அவர்கள் வாழ்த்த வேண்டும்.

அந்த அளவுக்கு நீங்கள் சமைத்து கொடுங்கள்,

சமையல் கலை பிரியர்களுக்கு 5 குறிப்புகள்

உளுத்தம் பருப்பு வடை செய்யும்போது மிருதுவாக உப்பி வர, ஐஸ்கட்டி சேர்த்து நைசாக அரைக்கவும், வடை தட்டும் போது இரண்டு ஸ்பூன் நெய், உப்பு, காரம் சேர்த்து தட்டி மிதமான தீயில் போட்டு எடுக்க, சூப்பரான மெதுவடை தயார்.

சப்பாத்தி, சன்னா மற்றும் சைடு டிஷ் செய்யும் போது இறக்கியவுடன் வெண்ணெய் சேர்த்துக் கிளறி, புதினா இலைகள் சிறிது சேர்த்துச் சூட்டில் மூடி விட, அலாதி சுவையாக இருக்கும்.

முளைகட்டிய வெந்தயம், நறுக்கியகேரட், வெள்ளரியுடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து சாலட் தயாரிக்கலாம். வெந்தயத்தை முளைகட்டி ஓரிரு முறை களைந்தால் அதன் கசப்பு கணிசமாகக் குறைந்துவிடும். இதை உண்ண, ரத்தத்தில் இரும்புச் சத்து கூடும்.

வெங்காயத்தையும், தக்காளியையும் சம அளவு எடுத்துப் பொடியாக நறுக்கவும். தேவையான உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து ஜாடியில் போட்டு நன்கு குலுக்கி மூடவும், ஊறிய பிறகு தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி எண்ணெயில் பொரித்து கெட்டித் தயிரில் போடவும். அத்துடன் தேவையான உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் போடவும். கத்தரிக்காய் தயிர் பச்சரடி ரெடி. கத்தரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து பின் எடுக்கலாம். இல்லையெனில் கறுத்துவிடும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer