Monday, May 30, 2016

மணிரத்தனம் இயக்கிய தளபதி படத்தின் முலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அரவிந்த்சாமி இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுவரை பல கேரக்டர்கள் செய்துள்ள அவர், முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு அரவிந்த்சாமியும், ஜெயம் ரவியும் ‘போகன்’ படத்தில் இணைய இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் போலீஸ் யூனிஃபார்மில் இணைந்திருக்கும் பல ஸ்டில்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ‘தனி ஒருவன்’ படத்தில் தன் வில்லத்தனமான நடிப்பின் மூலம் முத்திரை பதித்தார் அரவிந்த்சாமி. இப்போது போகன் படத்தில் ஐபிஎஸ் அதிகாரி யூனிஃபார்மில் அரவிந்த்சாமி காட்சியளிப்பதால் அவர் நல்லவராக நடிக்கிறாரா? கெட்டவராக நடிக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பில் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer