Monday, May 30, 2016

மீனவர்களை பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ள கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக புதுவை முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள நாராயண சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயண சாமி, புதுவை அமைச்சரவை மற்றும் பதவி ஏற்புக் குறித்து ஆலோசனை மேற்கொள்ள டெல்லி செல்வதாகக் கூறினார். அப்போது கேரளாவின் புதிய முதல்வர் முல்லைப் பெரியாறு அணை திடமாக உள்ளது என்று கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஆட்சியில் இருக்கும் வரை அவர் இதே கொள்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார் அவர்.

மேலும், மீனவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று, திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பது வரவேற்கத் தக்கது என்றும், அவருக்கு நன்றி என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer