Monday, May 30, 2016

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தனியார் பால் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சித்தான். தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழக அரசு காற்றாலை உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் பணப்பட்டுவாடா அதிகமாக இருந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷன் நல்ல நோக்கத்துடன் இதனை செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி உடனடியாக அங்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது. இதன்மூலம் பணம் பட்டுவாடா செய்வதை அந்த கட்சி ஊக்கப்படுத்துகிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

பா.ஜனதா பற்றி குறை கூறுவதற்கு இளங்கோவனுக்கு எந்த தகுதியும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா? அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியை பொருத்தவரை அங்கு போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அங்கு புதிய வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை அனைத்து கட்சிகளும் எதிர்கொள்ள வேண்டும். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை கொண்டு வரவேண்டும். அதுவே தமிழக அரசு மக்களுக்கு செய்யும் உதவியாக இருக்கும் என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer