Monday, May 30, 2016

கர்நாடக மாநிலத்தில் நடைப்பெற்ற பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, கடந்த இரண்டு ஆண்டு கால பாஜக ஆட்சியில் 700க்கும் மேற்பட்டத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று கூறினார்.

பாஜக அரசின் சாதனைகளை பாஜக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் நாடு முழுவதும் பயணித்து மக்களுக்கு பொதுக்கூட்டங்கள் மூலம் எடுத்துரைத்து வருகின்றனர்.கர்நாடக மாநிலத்தில் நடைப்பெற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர் இதுவரை 3 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

5 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் தமது அரசு கேட்டுக்கொண்டபடி வசதி படைத்த 1 கோடியே 13 லட்சம் பேர் மானிய விலை சமையல் எரிவாயு இணைப்பு தேவையில்லை என்று திரும்பி ஒப்படைத்துள்ளனர் என்று மோடி கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டு கால பாஜக ஆட்சி முடிவில் 700க்கும் மேற்பட்டத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer