Monday, May 30, 2016

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வேலூர் மருத்துவமனையில் இன்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

பேரறிவாளன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். இவர் சிறையில் இருந்தபடியே தேர்வு எழுதி முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீர்த் தொற்று நோய், இருந்து உள்ளுக்குள் இவரை வாட்டி வதைத்து வருகிறது. அடிக்கடி மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் இவரை சிறை நிர்வாகம் அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அன்றே சிகிச்சையை முடித்துக்கொண்டு மீண்டும் அழைத்துச் சென்று விடுகிறது.

இதுக்குறித்து மருத்துவர்களோ, அல்லது சிறை நிர்வாகமோ தெளிவான அறிக்கைகள் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. சிறு நீர்த் தொற்று நோயால் அவதிப்படுகிறார் என்று மட்டும் சொல்லும் சிறை நிர்வாகத்தினர், ஒரே நாளில் மருத்துவ சிகிச்சையை செய்து விட்டு அனுப்பி வைத்துவிடும் மருத்துவர்கள் என்று பேரறிவாளன் உடல் நலத்தில் மர்மம் நீடிக்கிறது. ஒரு கைதியின் உடல் நலம் அல்லது நோய் குறித்தத் தகவல்களைத் தெரிவிப்பது என்பது பெரும் குற்றமா என்று அரசியல் ஆர்வலர்கள், பொதுநல, சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer