Wednesday, May 25, 2016

நடிகர் கார்த்தி தன் பிறந்தநாளை உற்சாகமாய் கொண்டியுள்ளார். காஷ்மோரா திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார் கார்த்தி. படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கார்த்தி இன்றைய நாளை இயலாதவர்களுக்கு உதவி செய்யும் ஒரு நல்ல நாளாக அமைத்துக்கொண்டார்.

அரசு மருத்துவமனைக்கு 200 போர்வை வழங்குதல், சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரத்ததானம், வால்டாக்ஸ் ரோடு ஆதரவற்ற பிள்ளைகளுக்கு “அன்னதானம்”, திருவான்மியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் “ அன்னதானம்”, பாடி கோவிலில் அன்னதானம், ராயபேட்டை ஓட்டேரி ஆகிய இடங்களில் “ தண்ணீர் பந்தல்” மற்றும் பெயர் பலகை திறப்பு விழா என சமூக நல உதவிகளை செய்துள்ளார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் “இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராக் ஸ்டார் கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் இருவரும் ஒரு தினத்தில் பிறந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். காமெடி நடிகர் கவுண்டமணியும் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer