தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் முற்போக்குக் கூட்டணி தொழிற்சங்கப் போராட்டத்தினை இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10.30க்கு ஆரம்பித்துள்ள போராட்டத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் சம்பளத் தொகையுடன் 100 ரூபாயை இணைத்து இடைக்கால நிவாரணத் தொகையாக வழங்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட தரப்புக்கள் கோரிக்கையை முன்வைத்தன.
ஆனாலும், அதற்கு சாதகமான முடிவுகள் கிடைக்காத நிலையிலேயே ஏற்கனவே அறிவித்திருந்ததன் பிரகாரம் தமிழ் முற்போக்குக் கூட்டணி தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
Home
»
Sri Lanka
»
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து த.மு.கூ தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பு!
Thursday, May 26, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment