Monday, May 30, 2016

பா.ரஞ்சித் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் என நான்கு மொழிகளில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது ‘கபாலி’. சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட 'கபாலி' டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி வரும் நிலையில், இப்படத்தின், இசை உரிமையை 'திங்க் மியூசிக்' நிறுவனம் பெற்றுள்ளது.

கபாலி படத்தின் டீஸர் வெளியிட்டதை தொடர்ந்து, படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வருகிற 10-ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடத்தபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை முடிந்து, தற்போது ஜுலை 1-ஆம் தேதி வெளியிடுவதை உறுதி செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer