Monday, May 30, 2016

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் த்ரிஷா.மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக தன் நடிப்பை தொடங்கி சாமி, லேசா லேசா, கில்லி, மங்காத்தா போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு தேவதை என பெயர் வாங்கினார்.

சமீபமாக இவர் நடிப்பில் ’அரண்மனை - 2’ வெளியானது. அடுத்து  இவர் நடிப்பில் ’நாயகி’ படம் வரவிருக்கின்றது. இப்படம் முடிந்த கையோடு அடுத்து ’மோகினி’ என்ற திகில் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு அதிகம் கிராபிக்ஸ் வேலைகள் உள்ளதாம். இதற்காக ஹாலிவுட் படமான ஹாரிப்பாட்டர் படத்தில் பணியாற்றிய கலைஞர்களை இப்படத்திற்கு கமிட் செய்துள்ளார்களாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer