Thursday, May 26, 2016

வடக்கு மாகாணத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படமாட்டாது என்றும், கல் வீடுகளே அமைக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தம் குறித்து பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், "போர் மற்றும் இயற்கை அனர்த்தம் ஆகிய இரண்டினாலும் வடக்கு, கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பொருத்து வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. வடக்குக்கு பொருத்து வீடுகள் சாத்தியமில்லை. நிரந்தர கல் வீடுகளே தேவை. இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்புப்பெற கல் வீடுகளே தேவை. வடக்குக்கு கல் வீடுகளே தேவை என்பதற்கு இயற்கையே பாடம் புகட்டியுள்ளது'' என்றார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், "எமது அரசாங்கம் பொருத்து வீட்டுத் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளது. கல் வீடுகளே கட்டிக் கொடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer