Friday, May 27, 2016

63 வது பிலிம்ஃபேர் தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழா வரும் ஜூன் 18 தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் 2015 ஆம் ஆண்டு வெளி வந்த படங்களில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சிறந்த தென்னிந்தியப் படங்களை வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். இந்த விழா குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியில் பிரபலநடிகர் அரவிந்த்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியினை, நடிகர் அரவிந்த்சாமி, பிலிம்ஃபேர் நாளிதழின் ஆசிரியர் ஜிதேஷ் பிள்ளை, மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த திரு வினய்சுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் அரவிந்த்சாமி, “ நான் 1999 ஆம் ஆண்டு முதல் சினிமாவிலிருந்து விலகி இருந்தேன். அது ஒரு நீண்ட காலகட்டம். அந்த நேரங்களில் நான் படங்கள் பார்ப்பது கூட இல்லாமல் முழுவதும் விலகி இருந்தேன். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு இதே பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சிக்காக என்னையும் ஒரு நடுவராக தேர்வு செய்த போது தான் மிகக் குறைந்த நேரத்தில் சிறந்த பல படங்கள் பார்த்தேன். அது அப்போது ஒரு புதிய உணர்வைத் தந்தது. அதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில் நானும் ஒரு அங்கம் வகிப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. ” என்றார். தமிழ்ப்படங்களில் இவ்வாறு நடிக்க வேண்டும் ஹிந்தி படங்களில் இந்த மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும் என்று வரைமுறை வைத்து தேர்வு செய்வீர்களா? என்ற கேள்விக்கு, “அந்த மாதிரி எந்த வரைமுறையும் கிடையாது. நல்ல கதையை கேட்கும் போது அதனை சப்போர்ட் பண்ணனும். அது மாதிரி ஒரு கதை தான் Dear Dad.

0 comments :

Post a Comment

 
Toggle Footer