Sunday, May 29, 2016

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய புத்தக வளர்ச்சி குழுவும், ஆசிய மேதைமை அமைப்பும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களுக்கு ‘ஆசிய மேதைமை புத்தக விருது (சபா)’ வழங்கி வருகிறது.

இந்நிலையில், தற்போது கடந்த ஆண்டுக்கான சபா விருதுக்கு இந்திய பெண் எழுத்தாளரான அதிதி கிருஷ்ணகுமார் எழுதிய ‘சிந்து இழந்த புதையல்’ என்ற கையெழுத்து பிரதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

32 ஆயிரம் வார்த்தைகளை கொண்ட அந்த கையெழுத்து பிரதியில் இந்திய வரலாறு மீதான காதலை ஆசிரியர் வெளிப்படுத்தி இருந்தார்.

இதன் மூலம் அதிதி கிருஷ்ணகுமாருக்கு சுமார் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.

அதிதி கிருஷ்ணகுமார் இது குறித்து கூறுகையில், ஒரு எழுத்தாளர் ஆவதே எனது லட்சியமாக இருந்தது.

இந்த புத்தகம் எழுதுவது மிகவும் சவாலாக இருந்தது. எனினும் அதை நான் சாதித்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer