Friday, May 27, 2016

திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று, அகில இந்திய மருத்துவக் கழகம் கோரிக்கை வைத்துள்ளது.

சிகெரட் பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தி, புற்றுநோய் அபாயத்தை உணர்த்தும் வகையில் சிகரெட் அட்டைகளில் எச்சரிக்கை விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்கள் இருக்க வேண்டும் என்று, மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்து அது தற்போது நடைமுறையில் உள்ளது.ஆனால், இதனால் சிகரெட் பிடிக்கும் இளைஞர்கள் எந்த விதத்திலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது என்று இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.

எனவே, இளைஞர்களுக்கு புகைப்பிடிப்பதனால் வரும் புற்று நோய் அபாயத்தை உணர்த்தும் வகையில், திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் கோரிக்கை வைத்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer