Friday, May 27, 2016

திருகோணமலை சம்பூர் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சிரேஷ்ட கடற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் திட்டிய விடயம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலமைச்சரையும் கடற்படையையும் அறிக்கையிடுமாறு கோரியுள்ளார்.

G7 மாநாட்டுக்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், அறிக்கைகளை ஜனாதிபதியிடம் பிரதமர் கையளிப்பார் என பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.

தவிர, ஜனாதிபதி நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வரையில் கடற்படையையும், முதலமைச்சரையும் ஊடகங்களுக்கு அறிக்கை அளிப்பதை நிறுத்துமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer