Sunday, May 29, 2016

இணையத் தளத்தில் அதிகம் தேடப்படும் அரசியல்வாதிகளில் மோடிக்கு 2ம் இடம் என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையத் தளத்தில் அதிக அளவில் தேடப்படும் அரசியல்வாதிகள் குறித்த ஆய்வு ஒன்றை முகநூல் நிறுவனம் மேற்கொண்டதாகத் தெரிய வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார். 2ம் இடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். 3ம் இடத்தில் துருக்கி அதிபர் உள்ளார்.

ஒபாமா உலக மக்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு சுறு சுறுப்பான அரசியல்வாதியாக இருக்கிறார் என்றும், இதே வரிசையில் மோடியும் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இவரது அயராத உழைப்பும், உலக நாடுகளுக்கு அவர் அடிக்கடி பயணம் மேற்கொள்வதாலுமே அவர் இணையத் தளத்தில் தேடப்படும் பிரபல அரசியல்வாதியாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ள முகநூல் நிறுவனம், உலக இந்தியர்கள் தங்களது நாட்டின் தலைவரான மோடி பற்றித் தெரிந்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காண்பிக்கின்றனர் என்றும் முக நூல் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer