Friday, May 27, 2016

இலங்கை- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றது.

இதில் லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் சொதப்பிய இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டீர்டில் இன்று தொடங்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் அலாஸ்டர் குக் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன்படி அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

2014ம் ஆண்டு இவ்விரு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி அசத்தியது.

அந்த போட்டிகளின் போது சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே ஆகியோர் அணியில் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை அணி சற்று தடுமாறி வருகிறது.

இந்த நிலையில் தற்போது நடக்கும் தொடரில் ஏற்கனவே ஒரு போட்டியில் கோட்டை விட்டுவிட்ட இலங்கை அணி, 2வது டெஸ்டில் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.

இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி 2014ம் ஆண்டு பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer