ஈராக்கில் ISIS வசம் இருக்கும் ஃபலுஜா நகரை மீட்கப் பாரிய படை நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாக ஈராக் அரசு அறிவித்துள்ள நிலையில் அப்பகுதியில் சுமார் 10 000 குடும்பங்கள் வரை அகப்பட்டுக் கொண்டுள்ளதாக ஐ.நா சபை அச்சம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே திங்கட்கிழமை முதற்கொண்டு ஃபலுஜாவைச் சுற்றிக் கடும் சண்டை இடம்பெற்று வரும் நிலையில் ISIS ஐ எதிர்த்து இக்குடும்பங்கள் வெளியேறுவது கடினம் என்பதால் இந்நகரைக் கைப்பற்றும் போரில் பாரிய உயிர் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனக் கணிக்கப் பட்டுள்ளது.
சுன்னி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நகரான ஃபலுஜா பக்தாத்துக்கு மேற்கே 65 Km தொலைவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நகரை விட்டுப் தயக்கம் இன்றி வெளியேறுமாறும் இவர்கள் நகருக்கு வெளியே அண்மிக்கும் போது பாதுகாப்பான அரண்கள் மூலம் இராணுவம் இவர்களை உள்வாங்கி பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வார்கள் என்றும் உறுதி மொழிகள் அடங்கிய பேப்பர் சுவடிகளை விமானங்கள் மூலம் ஃபலுஜா நகருக்கு மேலே இட்டுச் சென்றுள்ளனர். மேலும் ஃபலூஜாவில் உள்ள குடிமக்கள் வெளியேற்றப் படுவதற்கு ஈராக் அரசு விசேட ஹாட்லைன் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஆனாலும் மனித உரிமை ஆர்வலர்கள் தகவல் படி ISIS வலுக்கட்டாயமாக குடிமக்களைப் பிடித்து வைத்திருப்பதுடன் பல தகவற் தொடர்பு லைன்களையும் தடை செய்து ஆயிரக் கணக்கான மக்களைக் குறுக்கு துப்பாக்கிச் சூட்டில் (Crossfire) உபயோகிக்க திட்டம் தீட்டி வருவதாகத் தெரிய வருகின்றது. எனினும் இதுவரை சுமார் 80 குடும்பங்கள் ஃபலுஜாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Home
»
World News
»
ஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா நகரில் 10 000 குடும்பங்கள்: ஐ.நா அச்சம்
Thursday, May 26, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment