Wednesday, April 27, 2016

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் இன்று புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிவகரனை கைது செய்ய வந்த அதிகாரிகள் துண்டு ஆவணமொன்றை வழங்கியுள்ளனர். குறித்த துண்டில், 'பாதுகாப்பு அமைச்சின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ், அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகரனை கைதுசெய்ததற்கான காரணம் எதையும் அதிகாரிகள் சொல்லவில்லை. கைதுசெய்யப்பட்ட சிவகரன், வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer