Thursday, April 28, 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பண்டாரநாயக்காக்கள் மற்றும் ராஜபக்ஷக்களின் காலம் முடிந்துவிட்டது என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வருகையுடனேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் பாரிய பிரச்சினை உருவெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தி்ல் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போதே டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer