Thursday, April 28, 2016

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்ததையடுத்து, பாமக தனது வேட்பாளரை மாற்றியது. விஜயகாந்த் டெபாசிட் வாங்க விடமாட்டோம் என்று வழக்கறிஞர் பாலுவை களமிறக்கியுள்ளார் ராமதாஸ். இதேபோல் திமுகவும், அதிமுகவும் கடும் நெருக்கடிக் கொடுக்க இருக்கிறது.

இந்த நிலையில் பாமவை எதிர்கொள்ள தயாராகியுள்ள விஜயகாந்த், தே.மு.தி.க இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதிஷை உளுந்தூர்ப்பேட்டை தேர்தல் களத்தல் இறக்கியுள்ளார். அவருடன், கட்சியின் முக்கிய நபர்கள் உளுந்தூர்ப்பேட்டை தொகுதி, முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், அனைத்து சமுதாய மக்களையும், பொது மக்களையும் சந்தித்து விஜயகாந்துக்கு ஆதரவு திரட்டினர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer