மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமிக்கு கவுரவக் குடியுரிமை வழங்க பாகிஸ்தான் அரசு முன் வந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 2 முறை டி20 உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த டேரன் சமி, பாகிஸ்தான் உள்ளூர் அணியான பெஷாவர் ஜால்மி அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான வீரராக உள்ள சமிக்கு கவுரவக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று பெஷாவர் அணியின் உரிமையாளர் ஜாவேத் அப்ரிடி டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் கைபர் பதுன்க்வா மாகாண முதலமைச்சர் பெர்வெய்ஸ் கட்டாக், டேரன் சமிக்கு கவுரவ குடியுரிமை வழங்குவதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, April 27, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment