Wednesday, April 27, 2016

வில்லு படத்திற்கு பிறகு நயன்தாராவும் விஜய்யும் ஜோடியாக சேர்ந்து நடிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் என்ன காரணத்தாலோ விஜய்யே முட்டுக்கட்டை போட்டுவிட்டார். என்னதான் மூன்று கோடி சம்பளம் வாங்குகிற அளவுக்கு தென்னகத்தின் சூப்பர் ஸ்டாரிணியாக இருந்தாலும் விஜய் மாதிரி பெரிய ஹீரோக்கள் புறக்கணித்தால் மரியாதை என்னாவது? அதனால் அவரே வலிய வந்து வந்தனம் பாடியிருக்கிறார்.

தெறி படத்தை பார்த்துவிட்டு அட்லீக்கும் விஜய்க்கும் போன் அடித்து வாழ்த்தினாராம். அதுமட்டுமல்ல, விஜய்யின் அழகென்ன? ஸ்டைல் என்ன? நடிப்பென்ன? நடையென்ன? என்றெல்லாம் வர்ணித்து தள்ளிவிட்டாராம் அட்லீயிடம். அப்படியே அது விஜய் காதுக்கு போகும் என்பது நயன்தாராவின் அனுபவத்திற்கு தெரியாதா என்ன!

0 comments :

Post a Comment

 
Toggle Footer