Monday, April 25, 2016

இந்த பாலஸ்தீனர்களின் ஒற்றுமை எபோது ஈழத் தமிழர்கள் இடையே வரும்? இந்த தலைப்பில் தான் இச்செய்தியை எழுதவேண்டி உள்ளது. சுமார் 4 மாதங்களுக்கு முன்னர், 12 வயதே ஆகும் டிமா அல் வாவி என்னும் பெண், தனது பள்ளி உடையில் இஸ்ரேல் பலஸ்தீன எல்லைக்கு சென்றுள்ளார். வெஸ்ட் பாங் என்று அழைக்கப்படும் அவ்விடத்தில் இஸ்ரேலிய யூதர்கள் வசிப்பது அதிகம். அங்கே அவரை பிடித்த பொலிசார் டிமாவை சோதனை செய்தபோது அவரிடம் ஒரு கத்தி இருந்துள்ளது. இதனால் இவர் யாரோ ஒரு இஸ்ரேலியரை கொலைசெய்யவே அங்கே வந்தார் என அறிந்துகொண்ட பொலிசார் அவரை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினார்கள். கொலை செய்ய எத்தணித்தார் என்ற காரணத்தை காட்டி இஸ்ரேலிய நீதிமன்றம் அவருக்கு 4 மாத சிறை தண்டனை விதித்து சிறையில் அடைத்தது.

12 வயதுச் சிறுமி என்று கூட இஸ்ரேல் அரசு பார்க்கவில்லை. இச்சிறுமியை சிறையில் அடைத்த விடையம் பல சர்வதேச ஊடகங்களில் வெளியானதால் பெரும் அழுத்தம் ஏற்பட்டது. இதன் காரணமாக 2 மாதத்திலேயே அவரை விடுதலை செய்ய இஸ்ரேல் அரசு ஒப்புக்கொண்டது. நேற்றைய தினம் அவர் விடுதலையானார். சிறைச்சாலைக்கு வெளியே திரண்ட பல நூறு பாலஸ்தீனியர்கள் இச்சிறுமிக்கு ஒரு ஹீரோ போன்ற வரவேற்ப்பை கொடுத்தார்கள். அதுபோக அவரது இளைய சகோதரன் (9 வயது) பாலஸ்தீன கொடியை உயர்த்திப் பிடித்து , இஸ்ரேலிய படையினருக்கு காட்டி வெறுப்பேற்றினான். எமது நாடு... எமது தேசம்... நாங்கள் பாலஸ்தீனியர்கள்.. இது எங்கள் கொடி என்பது இந்த 9 வயதுச் சிறுவனுக்கு நன்றாகப் புரிகிறது. குறித்த சிறுமி தனது சொந்தக் கிராமத்திற்குச் சென்றவேளை அதிர்ச்சியில் உறைந்துபோனார். கிராம மக்கள் பெரிய பனர்களை அடித்து கொழுவி இருந்தார்கள். தோரணங்கள் கட்டி அச்சிறுமியை வரவேற்றார்கள்.

ஆனால் பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடியை பிடிக்கவேண்டாம் என்று ஒரு கோஷ்டி கூறுவதும். அதனை பிடித்தால் வெள்ளைக்காரணுக்கு பிடிக்காது என்று ஒரு தமிழ் கோஷ்டி கூறுவதும் மிகவும் வெட்க்கக் கேடான விடையம். பாலஸ்தீனியர்களும் தங்கள் விடுதலைக்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை, எங்கள் தமிழ் இனத்தில் கிடையாது என்பது வெட்க்கப்படவேண்டிய விடையம். ஈழப் போராட்டத்தின் ஆரம்ப கால கட்டங்களில், பாலத்தீனியர்கள் எமது தலைவர்களுக்கு ஆயுதப் பயிற்ச்சிகளை வழங்கினார்கள். அவர்களில் சில மூத்த தலைவர்கள் இன்றுவரை உயிரோடு உள்ளார்கள். அவர்கள் கூட எமது போராட்டம் அழிந்ததை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இனியாவது நாம் ஒன்றுபட்டு எமது விடுதலை நோக்கிய பயணத்தில் ஒன்றாக செயல்படவேண்டும். வரும் மே மாதம் 18ம் நாள், லண்டனில் உள்ள பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலமான நம்பர் 10 டவுனிங் வீதிக்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்று நடக்கவுள்ளது.

முதலில் தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டு. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டு அதில் மக்கள் பூக்களை தூவி மரியாதை செலுத்தும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளது. பிரித்தானியர்கள் ரெட் பொப்பி நாளை எவ்வாறு அனுஷ்டிப்பார்களோ. அதற்கு இணையான தூபி ஒன்றை முள்ளிவாய்க்கால் நினைவு தூப்பியாக நிர்மாணிக்க , பிரித்தானிய தமிழர்கள் முடிவுசெய்துள்ளார்கள். இதற்கு அனைத்து தமிழர்களும் பிரித்தானிய ஒருங்கிணைப்புக் குழு (TCC) க்கு ஆதரவை நல்கவேண்டும். இம்முறை சிறப்பான மே 18 நினைவு கூரல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer