Friday, April 29, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பேஸ்புக்கினூடு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மலேசியாவிலிருந்து குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பிய போதே விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தியபோது, மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஜனவரி மாதம் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதன்போது குறித்த நபர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கடுமையாக விமர்சித்தும், ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த நபர் யக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் குமார லக்ஷ்மன் என்பதும், அவர் மலேசியாவில் தொழில் செய்து கொண்டிருப்பதும் தெரிய வந்திருந்தது. இந்த நிலையில், மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer