Friday, April 29, 2016

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது அமெரிக்க அரசு.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ளது.எனவே, இந்திய-அமெரிக்க நல்லுறவை வளர்க்கும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜூன் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று தெரிகிறது.எனவே, ஜூன் மாதம் 7 மற்றும் 8 திகதிகளில் அமெரிக்கா செல்ல உள்ள நரேந்திர மோடிக்கு அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர், நாடாளுமன்ற கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கா செல்லும் நரேந்திர மோடியும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள நிலையில்,மோடிக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு சிறப்பு அந்தஸ்து என்று கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer