Monday, April 25, 2016

லாலிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் கிஜோன் அணியை வீழ்த்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த லீக் போட்டியில் பார்சிலோனா- ஸ்போர்டிங் கிஜோன் அணிகள் மோதின.

இதில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி 12வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்ட முடிவில் பார்சிலோனா 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் பார்சிலோனா அணியின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. அந்த அணியின் லூயிஸ் சுவாரஸ் (63, 74, 77, 88வது நிமிடம்) 4 கோல் அடித்து அசத்தினார். நெய்மர் தன் பங்கிற்கு (85வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.

இதனால் பார்சிலோனா அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. சுவாரஸ் தொடர்ந்து 2வது போட்டியில் 4 கோல் அடித்துள்ளார்.

நடப்பு சீசனில் 34 கோல் அடித்துள்ள அவர், கிறிஸ்டியானோ ரொனால்டோவை (31 கோல்) பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer