Sunday, April 24, 2016

தன் எண்ணம், லட்சியம் எல்லாமே நயன்தாரா என்று இருக்கிறார் அஞ்சலி. இதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், தனக்கு நெருக்கமான சிலரிடம் ஷேர் பண்ணிக் கொண்டாராம். ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று துறவிகளே சொல்கிற காலத்தில், அஞ்சலி நயன்தாரா இடத்திற்கு ஆசைப்படுவதில் தப்பென்ன இருக்கு? ஆனால் அதில் ஒரு ஆபத்தும் இருக்கே? ஜீரோ சைசை குறி வைத்து தினந்தோறும் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார் அஞ்சலி. பெருமளவு உடல் இளைப்பதுதான் அவரது ஒரே நோக்கமாகவும் இருக்கிறது. இந்த கொழுப்பு நீக்க கோட்பாடு ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தினால் உள்ளதும் போச்சே கள்ளப்பெண்ணே கதையாகிவிடுமே? இளைப்பேன்... ஆனால் முகத்தில் ஒரு மிலி கிராம் கூட சுருங்காது என்கிற நயன்தாரா வித்தையை மட்டும் தெரிந்து கொண்டு முயலுங்க அஞ்சலி. இல்லேன்னா புயலடிச்சு ஓய்ஞ்ச புளிய மரக் கிளையாகிவிடும் பேஸ்கட்டு!.

0 comments :

Post a Comment

 
Toggle Footer