Friday, April 29, 2016

ராயபுரம் முழுவதும் போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று, அத்தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு எப்போத்யும் அதிமுக சார்பில் ஜெயக்குமார் நிறுத்தப்படுவர். கடந்த முறை ஜெயக்குமார் வெற்றிப் பெற்ற நிலையில், தமது தொகுதிக்கு அனைத்து வசதிகளும் அம்மாவின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டு உள்ளதாக ஜெயக்குமார் கூறி, தொகுதியில் வாக்குச் சேகரித்தார். அப்போது, அதிமுக ஆட்சியில் அம்மாவின் ஒத்துழைப்புடன் தாம் தமது தொகுதியில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களிலும் தூர் வாரி உள்ளதாகவும்,100 ஆண்டுகளில் இல்லாத மழை சென்னையில் பெய்தும் ஒரு சொட்டு நீர் கூட ராயபுரம் தொகுதியின் தெருவில் தேங்கவில்லை என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

ராயபுரம் தொகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது என்றும், காரணம் சிறு சிறு தெருக்களிலும் வியாபாரம் நடப்பதாலும், போக்குவரத்து வசதி காரணம் என்று கூறியுள்ள ஜெயக்குமார், சிறு சிறு தெருக்களிலும் சிறிய
பேருந்துகள் விடப்பட்டு, போக்குவரத்து வசதி செய்யப்படும் என்றும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer