Monday, April 25, 2016

குஜராத் அணியின் தலைவர் ரெய்னாவின் சமீபத்திய வெற்றிக்கு, அவரது மனைவி பிரியங்காவின் ஆதரவும், டோனியிடம் தான் கற்றுக்கொண்டதும், இளம் வயதில் டிராவிட் மற்றும் கைஃப்யுடன் மேற்கொண்ட பயிற்சியும் தான் காரணம் என ரெய்னா நெகழ்ச்சியுடன் கூறியுள்ளாா்.

ஐ.பி.எல் தொடாில், கடந்த எட்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், டோனி தலைமையின் கீழ் விளையாடி வந்த ரெய்னா. தற்போது, நடந்து வரும் ஐ.பி.எல் தொடாில் குஜாரத் அணியின் தலைவராக திகழ்ந்து வருகிறாா்.

தற்போது வரை, குஜாரத் அணி விளையாடிவுள்ள ஐந்து போட்டியில் நான்கு வெற்றி, ஒரு தோல்வியடந்துள்ளது. இந்நிலையில், குஐாரத் அணியின் தலைவர் ரெய்னா, அவரது சமீபத்திய வெற்றிக்கான ரகசியத்தை தொிவித்துள்ளாா்.

அவரது சமீபத்திய வெற்றிக்கான பாராட்டு தனது மனைவி பிரியங்காவையே சேறும் என அவர் தொிவித்துள்ளாா்.

நான் பொறுப்பாகவும், அமைதியாகவும் செயல்பட பிரியங்கா எனக்கு உதவினாா், அணியினாருடன் அதிக நேரம் செலவிட அவா் ஆதரவு தெரிவித்தாா், பிரியங்கா என்னை புரிந்து கொண்டு, எனக்கு ஆதரவாக செயல்பட்டதே எனது வெற்றிக்கான காரணம்.

மேலும், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக நான், டோனியுடன் களத்தில் விளையாடி வருகிறேன், களத்தில் விளையாட்டு நுணுக்கங்களை அவரிடம் இருந்து நான் புரிந்து கொண்டேன்.

நெருக்கடியான நிலையில் அவா் எடுக்கும் முடிவுகள், அமைதியாக செயல்படுவது குறித்து அவரிடமே நான் கேட்டு தெரிந்துகொண்டேன், டோனியிடம் நான் பல விடயங்கள் குறித்து கற்றுக்கொண்டேன்.

டோனியை தொடர்ந்து, நான் இளம் வயதில் டிராவிட் மற்றும் கைஃப்புடன் மேற்கொண்ட பயிற்சியும் எனது வெற்றிக்கு உதவியது என அவர் நெகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer