Friday, April 29, 2016

திமுகவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

அரசு அதிகாரிகள் 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்துக் கொண்டு இருந்தால்,அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.ஒரே இடத்தில் 3 வருடத்துக்கு மேல் பணியில் இருப்பவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை அடுத்து, திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer