Wednesday, April 27, 2016

தென் சீனக் கடலில் சீனா சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டு வருகின்றது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தென் சீனக் கடற் பிராந்தியத்தில் அத்து மீறி தனது கடற்படை மூலம் வேவு பார்ப்பதாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் சர்வதேச விதிகளை மீறி சீனா இப்பகுதியில் தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க எத்தனித்து வருவதாக ஒபாமா தெரிவித்துள்ளார். அண்மையில் ஜேர்மனிக்கு ஒபாமா சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது மேற்கொள்ளப் பட்ட குறித்த நேர்காணலில் ஒபாமா மேலும் ரஷ்யாவைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதாவது ஐரோப்பியன் யூனியன், மற்றும் டிரான்ஸ் அத்லாண்டிக் ஆகியவை ரஷ்ய சக்திக்கு ஓர் அச்சுறுத்தல் என்ற புட்டினின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றார்.

தனது பதவிக் காலம் முடிய 8 மாதமே இருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் சீனாவுடனான உறவைப் பாதிக்கும் வகையில் செயற்படுகின்றாரோ என ஊடகத் தரப்பில் கேள்வி எழுந்துள்ள நிலையில் ஆசியாவிலுள்ள இன்னொரு வல்லரசான இந்தியா ஒபாமாவின் கூற்றை வரவேற்றுள்ளது. ஆயினும் குறித்த சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளும் திட்டத்தில் உள்ளனவா என்ற கேள்விகளை இரு நாடுகளுமே மறுத்துள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer