Sunday, April 24, 2016

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ, ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கு எந்தவொரு அமைப்பிற்கோ அல்லது தனி நபருக்கோ இடமளிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கண்டி, ஹுரிகடுவ பிரதேச விகாரை ஒன்றில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சிலர் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer