கடந்த சில நாட்களாக தொடர்ந்த முறையற்ற கைதுகள் போன்று எதிர்காலத்தில் இடம்பெறாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதாவது, “அண்மையில் முன்னாள் போராளிகள் மற்றும் ஏனையோர் கைது செய்யப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்யக் கூடாது என சொல்ல முடியாது. சந்தேகத்தின் பேரிலும், சாதாரண சட்டத்தின் கீழும் நபர் ஒருவர் கைது செய்யப்படலாம். கைது செய்யும் போது சட்டத்தின் கீழான முறை ஒன்று உள்ளது. அவசர காலசட்டம் இருக்கும் போது, விசேடமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டால், உடனடியாக பற்றுச் சீட்டு ஒன்று கையளிக்கப்பட வேண்டும்.
தற்போது பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இல்லாத போதும், அந்த நடைமுறையினை செயற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம். பலர் காணாமல் போயுள்ள சூழ்நிலையில் இவ்வாறான கைதுகளை அனுமதிக்க முடியாது. இவ்வாறான கைதுகள் பற்றி அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
இனிமேல் இவ்வாறான கைதுகள் இடம்பெறாது என அரசாங்கம் உத்தரவாதம் கொடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் கைதுகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றால், எதிர்ப்புத் தெரிவிப்போம்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், நேற்றும் இன்றும் கைதுகள் நடைபெறவில்லை. இனிவரும் காலங்களில் கைதுகள் நடைபெறாது என்பது எமது நம்பிக்கை.” என்றுள்ளார்.
Saturday, April 30, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment