Friday, April 29, 2016

வருகிற 5ம் திகதி சென்னை தீவுத் திடலில் ஒரே மேடையில் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

வருகிற மே மாதம் 16ம் திகதி தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடக்க உள்ள நிலையில்,அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.இந்நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து உள்ளது. எப்படியாவது திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று இருக் கட்சிகளும் கடுமையாக உழைத்து வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்துக்கு சோனியாவும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகம் வருவார்களா என்கிற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், சோனியா காந்தி 5ம் திகதி தமிழகம் வரவுள்ளார் என்றும்,சென்னை தீவுத் திடலில் நடக்க இருக்கும் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் கருணாநிதியுடன் சேர்ந்து சோனியாவும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, வாக்குச் சேகரிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதற்கான மேடை பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer