இறுதி மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் நிகழ்வினை இம்முறை வவுனியாவில் அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி மாலை 04.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அன்று காலை 06.00 மணி தொடக்கம் 08.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதஸ்தலங்களிலும் மோதல்களில் இறந்த அனைத்து மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்தோடு, பொது அமைப்புகள் மற்றும் ஏனைய கட்சிகளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு இறுதி மோதல்களில் இறந்த அனைவருக்காகவும் பிரார்த்தனையில் ஈடுபட கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு வருமாறும் அழைக்கப்பட்டுள்ளனர்.
Thursday, April 28, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment