Thursday, April 28, 2016

நடிகர் சங்கத்திலிருந்து சிம்பு விலகிவிட்டார். இதனால் சிம்புவுக்கோ, சிம்புவால் நடிகர் சங்கத்திற்கோ ஒரு நஷ்டமும் இல்லாவிட்டாலும் இதை ஒரு பெரிய விஷயமாக விவாதித்து வருகிறது உலகம்.

ஒருவரின் ராஜினாமா கடிதத்தை எடுத்த எடுப்பிலேயே சம்மதித்துவிட முடியாது என்பதால், “முதலில் அவர் லெட்டர் தரட்டும். அப்புறம் சங்கத்தின் முடிவு என்ன என்பதை பற்றி யோசிக்கலாம்” என்று கூறிவிட்டார் விஷால். இது ஒருபுறமிருக்க நடிகர் சங்கத்தை இரண்டாக உடைக்கும் முயற்சியின் துவக்கம்தான் இது என்றும் சொல்லப்படுகிறது. அப்படியொரு சங்கம் உருவானால் அதற்கு அஜீத்தை முன்னிலைப்படுத்தி ஆட்களை திரட்டுவார்கள் என்றெல்லாம் யூகங்கள் பறக்க, எல்லாவற்றையும் கேட்டு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறது சங்க வட்டாரம். ஏன்? “சொந்தப்பட பங்ஷனுக்கே தலையை காட்டாத அஜீத், ஊர் விவகாரத்திற்காக ஒன்று சேர்வாரா? அவரது குணம் மணம் தெரிஞ்சும் கோட்டை கட்றீங்களே மவராசா?” என்கிறார்கள். நிஜம் பொய்யை விட இனிப்பானதில்லையே? அதனால்தான் இப்படியெல்லாம்....

0 comments :

Post a Comment

 
Toggle Footer