Monday, April 25, 2016

சவூதி அரேபிய நாட்டில் கற்களால் அடித்து கொலை செய்யப்படவிருந்த இலங்கைப் பெண் தாயகம் வரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த பெண் சவூதி அரேபிய நாட்டில் நபர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததன் காரணமாகவே கல்லால் எறிந்து கொலைசெய்யப்படவேண்டும் என்ற தண்டனை விதிக்கப்பட்டது. இதனுடன் தொடர்புடைய இளைஞனுக்கு 100 கசையடிகளும் வழங்குவதற்கும் சவூதி அரசு தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து இந்த தண்டனையை வழங்க வேண்டாம் என இலங்கையிலும், உலக நாடுகளிலும் எதிர்ப்புகள் ஏற்பட்டதோடு, இலங்கை அரச தரப்பிலும் சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் இவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்த சவூதி அரசு, இந்தப் பெண்ணுக்கான தண்டனையை 4 வருட சிறை தண்டனையாக மாற்றி அமைத்தது. மத்திய கிழக்கு நாடுகளில் வேலைசெய்யும் பல ஆண்கள் கூட இதுபோல, பல பாலியல் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். அவர்கள் வீடுகளில் கார் ஓட்டுனராக இருப்பார்கள். அந்த வீட்டு எஜமான வெளியே செல்லும் வேளைகளில். மனைவி அவரை உறவுக்கு அழைப்பதும். வரவில்லை என்றால் தன்னை கற்பழிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டுவார்கள். ஒரு வேளை இதற்கு பயந்து உறவுவைத்துக்கொண்டால்.

பின்னர் ஒரு காலத்தில் மாட்டிக்கொண்டாலும், கணவனால் தண்டிக்கப்படுகிறார்கள். நான் இன் நாடுகளில் இருந்து என்ன தான் செய்வது என்று தெரியவில்லை என்று மிகவும் மனக் கசப்போடு ஒரு ஈழத் தமிழ் இளைஞர் அங்கிருந்து அதிர்வு இணையத்திற்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார். இதுபோலவே குறித்த இலங்கைப் பெண்ணை, இவர்கள் செய்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer