Wednesday, April 27, 2016

பெல்ஜியத்தில் நடந்த ஏர் போட் குண்டுவெடிப்பில், படுகாயமடைந்த இந்தியப் பெண் கோமா நிலைக்குச் சென்றிருந்தார். சரியாக ஒரு மாதம் கழித்து இன்று தான் அவர் கண் முழித்துள்ளார். நிட்ஹி என்னும் 42 வயது இந்தியப் பெண் பெல்ஜிய ஏர்போட்டில் நடந்த குண்டுவெடிப்பில், பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகி இருந்தார். சுமாட் 15 விகிதமான தோல் அவருக்கு எரிந்து இருந்தது. இன் நிலையில், அவருக்கும் பெரும் அதிர்ச்சியும் ஏற்பட்டு இருந்தது. உதவியாளர்கள் ஓடிவந்து இனி எல்லாம் சரியாகிவிடும்.

உங்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்கிறோம் என்று கூறியது மட்டுமே அவருக்கு நினைவிருக்கிறது. அதன் பின்னர் 30 நாட்கள் கழித்தே அவர் கண் விழித்துள்ளார். இன்னும் அதிர்ச்சியில் இருந்து அவர் மீண்டபாடாக இல்லை. மேலும் அவர் குண்டு தாக்குதலில் கயமடைந்து, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் காட்சியே பல மீடியாக்களில் வெளியாகி புகழ்பெற்ற புகைப்படமாக மாறி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer