Tuesday, April 26, 2016

ஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு.

ஒப்பந்த தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத் தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தது. இந்நிலையில் மத்திய தொழில்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி அறிவித்து உள்ளதாக தெரிவித்தார்.

அதோடு இந்தத் தொகை ஓய்வூதியம், போனஸ் உள்ளிட்டவற்றோடு இணைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer